Aadi Bharani festival at Ratnagiri Balamurugan Temple is located in Arcot


ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடி பரணி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் ஏழாம் படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படுகின்ற பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயில் உள்ளது.

இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஆடி பரணி மற்றும் கிருத்திகை விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் விழா நடைபெற்றது. தற்போது கொரோனா தொற்று குறைந்த நிலையில் விழா நடத்த அரசு அனுமதித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து நேற்று விடியற்காலை 5.30 மணிக்கு சுவாமி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தார்.

இதில் தங்க கவசமணிந்து தங்கவேல் சேவல் கொடியுடன் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தேவசேனா சமே தராக சுவாமி பாலமுருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடி பரணி விழா முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து வந்து சுவாமி பாலமுருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் சுக்கு காபி வழங்கப்பட்டது. இரவு மங்கள வாத்தியத்துடன் சுவாமி திருவீதி உலா மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று ஆடிகிருத்திகை விழா சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலர் வி.சங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.