ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில், மகளிர் திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 65 பெண்களுக்கு ரூ.16 லட்சம் கடனுதவிக்கான ஆணையை ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். 
அப்போது குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொது நலன் உள்ளிட்ட 280 மனுக்கள் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்டன.

மகளிர் திட்டத்தின் மூலம் தொழில் முனைவோருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 65 பெண்களுக்கு ரூ.16 லட்சத்து 25 ஆயிரம் கடனுதவிக்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.குமரேஷ்வரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) நானிலதாசன், துணை ஆட்சியர்கள் சேகர், தாரகேஷ்வரி, உதவி திட்ட அலுவலர்கள் ஷாகுல் ஹமித், சுபாஷ் சந்திரன், பெர்லினா மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.