வணிக பெயரில் அல்லாமல் பையில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி அறி விக்கப்பட்டுள்ளது.
இது, நாளை முதல் (18 ம் தேதி) அமலுக்கு வருகிறது. இதனால், அரிசி ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை விலை அதிகரிக்கும். இந்நிலையில், 5 சதவீதம் வரியை திரும்பபெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள், கடைகளை அடைத்து உரிமையாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலாளர் டாக்டர் மோகன் கூறியது:

அரிசிக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டது, ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வரியால் அரிசி விலை உயரும். அரிசிக்கு செயற்கை யான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதனால், 5 சதவீதம் வரியை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 4 ஆயிரம் அரிசி ஆலைகள், 3 ஆயி ரத்துக்கும் அதிகமான மொத்த வணிகம் செய்யும் கடைகள் ஒருநாள் அடை யாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங் கானா. உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்க ளிலும் அரிசி ஆலைகளும், அரிசி மொத்த வணிக நிறு வனங்களும் மூடப்பட்டன. 5 சதவீதம் வரி திரும்பப் பெறப்படும் என்ற நம் பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். மார்க்சிஸ்ட் கண்டனம்

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

பைகளில் அடைத்து விற்கப்படும் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட அத் தியாவசியப் பொருட்களுக் கும் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப் படுவர்.

ஏற்கனவே பணவீக்கத் தாலும், விலைவாசி உயர் வாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் மேலும் துயரத்தின் பிடியில் தள்ளும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, இதை திரும்பப் பெற வேண்டும். இதர பொருட்கள் மீதான வரி விகிதத்தையும் முழுமையாக திரும்பப் பெற வேண் டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.