ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், 16  வயது மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம் வரும் 23ம் தேதி சனிக்கிழமை ராணிப்பேட்டை இஐடி பாரி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.

அன்றைய தினம் காலை 8 மணிக்கு, 16 வயதுக்குட் பட்ட வீரர்கள் தேர்வு நடக்கிறது. இதில் பங்கேற்போர் 01.09.2006 மற்றும் அதற்கு பின்னர் பிறந்தவராக இருத்தல் வேண்டும். அதே நாள் காலை 10 மணியளவில் 19 வயதுக்குட்பட்டோருக் கான வீரர்கள் தேர்வு நடக்கிறது.

இதில் பங்கேற்போர் 01.09.2003 மற்றும் அதற்கு பின்னர் பிறந்தவராக இருத்தல் வேண்டும். விருப்பம் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்கள் தங்களது பிறப்பு சான்று மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் வரவேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேசன் இணைச்செயலாளர் பிரேம்ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.