குறள் : 818
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்
மு.வ உரை :
முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.
கலைஞர் உரை :
நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும்
சாலமன் பாப்பையா உரை :
தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுக.
Kural 818
Ollum Karumam Utatru Pavarkenmai
Sollaataar Sora Vital
Explanation :
Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.
Horoscope Today: Astrological prediction for July 22, 2022
இன்றைய ராசிப்பலன் - 22.07.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
இராகு காலம் | Indraya Nalla Neram
பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
சூரிய உதயம் 6.1 கடக லக்கனம் இருப்பு நாழிகை 4 விநாடி 37
இன்றைய ராசிப்பலன் - 22.07.2022 | Today rasi palan - 22.07.2022
மேஷம்
இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. அனைத்து தேவைகளும் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை உண்டாகும். வீட்டில் பெற்றோருடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் கிட்டும். வேலையில் புதிய நட்பு கிடைக்கும்.
மிதுனம்
இன்று தொழில் ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வெளிவட்டார நட்புகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.
கடகம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிலும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
சிம்மம்
இன்று நீங்கள் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன் பிரச்சினைகள் குறையும்.
கன்னி
இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக மனஉளைச்சல் ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.
துலாம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சுபசெலவுகள் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறையும்.
விருச்சிகம்
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிட்டும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
தனுசு
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.
மகரம்
இன்று நீங்கள் எதிர்பாராத பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். புதிய வாய்ப்புகள் கிட்டும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
கும்பம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நினைத்த காரியம் நிறைவேறும்.
மீனம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.
Horoscope-Today-Astrological-prediction-for-July-22-2022