ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள வேடந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். ஜோதி மற்றும் அவரது குடும்பத்தினர் தனது பேரக்குழந்தைகளுக்கு காது குத்துவதற்காக பெங்களூரில் இருந்து வேடந்தாங்கல் கிராமத்திற்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.
இதில் பெங்களூரில் இருந்து காரில் வந்த இளைஞர்கள் காரை எடுத்துக் கொண்டு வேடந்தாங்கலில் இருந்து பாணாவரம் சென்றுள்ளனர். மீண்டும் பாணாவரத்தில் இருந்து மகேந்திரவாடி வழியாக வேடந்தாங்கல் நோக்கி காரில் வந்துள்ளனர். அப்பொழுது வேடந்தாங்கல் அருகே ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் ஓட்டி பாணாவரம் அடுத்த கோபாலபுரம் காட்ரம்பாக்கம் பகுதியை சேர்ந்த நவீன்குமார்(20) பெங்களூர் சேர்ந்த அருண்குமார்(24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் மூர்த்தி (22) சதீஷ் (25) சரவணகுமார் (24) ஏழுமலை (25) ஆகிய 4-பேர் பலத்த காயங்களுடன் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 4-நபர்களையும் வேலூர் அடுக்குமறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கார் விபத்து குறித்து பாணாவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குல தெய்வ வழிபாட்டிற்காக பெங்களூரில் இருந்து சொந்த கிராமத்திற்கு வந்ததில் கார் விபத்துக்குள்ளானதில் இருவா் பலியான சம்பவம் வேடந்தாங்கள் கிரமத்தில் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.