சோளிங்கர் அடுத்த கட்டாரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன். அவரது மகன் இளையராஜா(26). மெக்கானிக், திருமணமாகாதவர், இவர் நேற்று முன் தினம் இரவு பாராஞ்சியில் இருந்து சோளிங்கர் நோக்கி வந்துக்கொண்டிருந்தார். அரியூர் கூட்ரோடு வந்த போது அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது அண்ணன் பாரதிராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.