You do not need cash on hand to travel by bus .. Information given by the Minister!
பஸ்ஸில் பயணம் செய்ய கையில் காசு தேவையில்லை.. அமைச்சர் சொன்ன தகவல்!
சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் வழங்கப்படும்.
அதுவரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம். பள்ளி வாகனங்களில் முன்புறம் பின்புறம் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி திறந்தவுடன் முழுமையாக அவை கண்காணிக்கப்படும்.
பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ- டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின், gpay, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்" என தெரிவித்தார்.