ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த காவனூரில் விவசாய கிணற்றில் குளிக்க சென்ற ரோஷன்(26), யுவராஜ்(38) நீரில் முழ்கி உயிரிழந்தனர். சடலத்தை கைப்பற்றி அரக்கோணம் நகர காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.

அரக்கோணம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் ரோஷன்(26). இவர் தனியார் நிறுவனத்தில் ஒட்டுனராக பணிப்புரிந்து வந்தார்.

சனிக்கிழமை மதியம் சென்னை பெரம்பூரிலிருந்து ரோஷனின் நண்பன் ராஜ்குமார்(36) அரக்கோணம் வந்துள்ளார். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்தார்.

ரோஷன், யுவராஜ் இருவரும் அரக்கோணம் அடுத்த காவனூரில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் அங்கிருந்த கிணற்றில் குளித்துள்ளனர்கள். அப்போது நீச்சல் தெரியாத யுவராஜ் நீரில் முழ்கியதாகவும் அவரை மீட்க முயன்ற ரோஷன் இருவரும் நீரில் முழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இருவரும் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இன்று காலை காவனூர் விவசாய கிணற்றின் கரையில் இருவரது உடைகள் இருந்த நிலையில் கிணற்றில் பார்த்தபோது இருவரது சடலங்களும் மிதந்ததை கண்டு அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அரக்கோணம் நகர காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சடலத்தை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.