👉 2007ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் (iPhone) வெளியிடப்பட்டது.
நினைவு நாள் :-
👉 2009ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி மொழியியல் அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியம் மறைந்தார்.
பிறந்த நாள் :-
👉 இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணித மற்றும் புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மகாலனோபிஸ் (Prasanta Chandra Mahalanobis) 1893ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.
👉 இவருடைய பிறந்த நாள் தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் கொல்கத்தாவில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை 1931-ல் நிறுவினார். மகாலனோபிஸ் தொலைவு, ரேண்டம் சாம்ப்ளிங் முறை ஆகியவற்றை வரையறுத்துள்ளார்.
👉 அமெரிக்க எகனாமிக் சொசைட்டியின் ஃபெலோஷிப், பத்மவிபூஷண், சீனிவாச ராமானுஜன் தங்கப்பதக்கம் என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
👉 பொருளாதாரத் திட்டமிடல் மற்றும் புள்ளி விவர வளர்ச்சி துறைகளில் மிக உன்னதமான பங்களிப்பை வழங்கிய மகாலனோபிஸ் 78வது வயதில் (1972) மறைந்தார்.
👉 தமிழ் நாடக உலகில் புரட்சியை ஏற்படுத்திய, நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் 1925ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி நாமக்கல்லில் பிறந்தார்.
👉 இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா என்ற நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார்.
👉 இவர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். இவர் நடித்த இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், நரகாசுரன், சுக்ராச்சாரியார் உள்ளிட்ட நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை.
👉 சினிமா கதாநாயகனாக அறிமுகமான இவர் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், வல்லவனுக்கு வல்லவன், ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், இதயக்கனி உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.
👉 இவர் இசைப்பேரறிஞர், நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்கள் பெற்றவர். தமிழ் நாடகத் துறையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய ஆர்.எஸ்.மனோகர் 80வது வயதில் (2006) மறைந்தார்.
இன்றைய தின நிகழ்வுகள்
1194 – நோர்வேயின் மன்னராக சுவேர் முடிசூடினார்.
1534 – இழ்சாக் கார்ட்டியே முதலாவது ஐரோப்பியராக பிரின்சு எட்வர்ட் தீவை அடைந்தார்.
1613 – இலண்டனில் சேக்சுபியரால் ஆரம்பிக்கப்பட்ட குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது.
1659 – கொனோட்டொப் போரில் உக்ரைனியப் படைகள் இளவரசர் துருபெத்சுக்கோய் தலைமையிலான உருசியப் படைகளைத் தோற்கடித்தன.
1786 – ஆயர் அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் இசுக்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர்.
1807 – உருசிய-துருக்கிப் போர்: திமீத்ரி சென்யாவின் தலைமையிலான உருசியக் கடற்படை உதுமானியரை ஏதோசு சமரில் தோற்கடித்தது.
1814 – மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர்.[1]
1864 – கனடா, கியூபெக்கில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 99 பேர் உயிரிழந்தனர்.
1880 – பிரான்சு தாகித்தியைக் கைப்பற்றியது.
1888 – ஜோர்ஜ் எடுவார்ட் கவ்ராட் என்பவர் ஆண்டெலின் எகிப்தில் இசுரேல் என்ற ஆக்கத்தை கிராமபோன் உருளை ஒன்றில் பதிவு செய்தார்.
1895 – சாரின் உருசியப் அரசின் படைக்குக் கட்டாய ஆளெடுக்கும் நடவடிக்கையைக் கண்டித்து டுகோபார் தமது ஆயுதங்களை எரித்தனர்.
1900 – நோபல் பரிசுகளின் நிதி மூலங்களையும் அதன் நிர்வாகத்தையும் “நோபல் அறக்கட்டளை” ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கபபட்டது.
1914 – சைபீரியாவில் கிரிகோரி ரஸ்புடின் மீது கொலை முயற்சி நடந்தது.
1950 – கொரியப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் கொரியா மீது கடல் மார்க்கத் தடையை ஏற்படுத்துவதற்கு அனுமதி அளித்தார்.
1975 – ஸ்டீவ் வாஸ்னியாக் முதலாவது ஆப்பிள் I கணினியை சோதித்தார்.
1976 – சீசெல்சு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1995 – அட்லாண்டிசு விண்ணோடம் உருசிய விண்வெளி நிலையம் மீருடன் முதல் தடவையாக இணைந்தது.
1995 – தென் கொரியாவின் சியோல் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 501 பேர் உயிரிழந்தனர், 937 பேர் காயமடைந்தனர்.
2002 – தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நடைபெற்ற கடற்படைச் சமரில், ஆறு தென்கொரிய வீரர்கள் கொல்லப்பட்டனர், வட கொரியப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது.
2006 – குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாம் கைதிகளை இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை செய்ய அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் வாக்கர் புஷ் எடுத்த முடிவை ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை செய்தது.
2007 – ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது ஐ-போன் செல்லிடபேசியை அறிமுகப்படுத்தியது.
2012 – அமெரிக்காவின் கிழக்குப் பகுதியைத் தாக்கிய நீள்சுழற்காற்றினால் 22 பேர் உயிரிழந்தனர்.
2014 – இசுலாமிய அரசு சிரியாவிலும் வடக்கு ஈராக்கிலும் தமது கலீபகத்தை நிறுவினர்.
2014 – நைஜீரியாவில் சிபோக் நகரில் உள்ள நான்கு கிறித்தவக் கோவில்களை இசுலாமியத் தீவிரவாதிகள் தீக்கிரையாக்கி, அங்கிருந்த குறைந்தது 30 பேரைக் கொன்றனர்.
2015 – சென்னை மெட்ரோவின் முதல் கட்ட சேவை ஆலந்தூர், சென்னை கோயம்பேடு இடையே ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய தின பிறப்புகள்
1818 – ஏஞ்செலோ சேச்சி, இத்தாலிய வானியலாளர் (இ. 1878)
1864 – அசுதோசு முகர்சி, வங்காளக் கல்வியாளர், வழக்கறிஞர், கணிதவியலாளர் (இ. 1924)
1868 – ஜார்ஜ் எல்லேரி ஏல், அமெரிக்க வானியலாளர், ஊடகவியலாளர் (இ. 1938)
1888 – அலெக்சாந்தர் ஃபிரீடுமேன், உருசிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1925)
1893 – பிரசந்தா சந்திரா மகாலனோபிசு, இந்தியப் பொருளியலாளர் (இ. 1972)
1900 – அந்துவான் து செயிந் தெகுபெறி, பிரான்சியக் கவிஞர், விமானி (இ. 1944)
1909 – தாமசு பறோ, ஆங்கிலேய இந்தியவியலாளர், சமற்கிருதப் பேராசிரியர் (இ. 1986)
1925 – ஆர். எஸ். மனோகர், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 2006)
1925 – ஜார்ஜியோ நபோலிடானோ, இத்தாலியின் 11வது அரசுத்தலைவர்
1931 – பி. கே. அய்யங்கார், இந்திய அணுசக்தி அறிவியலாளர் (இ. 2011)
1936 – எடி மாபோ, ஆத்திரேலியப் பழங்குடித் தலைவர் (இ. 1992)
1945 – சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இலங்கையின் 5வது அரசுத்தலைவர்
1947 – அனுராதா ரமணன், தமிழக எழுத்தாளர் (இ. 2010)
1973 – கார்த்திக் ராஜா, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
1978 – நிக்கோல் செர்சிங்கர், அமெரிக்கப் பாடகி, நடிகை
1990 – ஹரீஷ் கல்யாண், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
இன்றைய தின இறப்புகள்
1861 – எலிசபெத் பிரௌனிங், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1806)
1873 – மைக்கேல் மதுசூதன் தத்தா, இந்தியக் கவிஞர் (பி. 1824)
1895 – தாமசு என்றி அக்சுலி, ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1825)
1966 – தாமோதர் தர்மானந்தா கோசாம்பி, இந்திய மார்க்சியப் புலமையாளர், கணிதவியலாளர் (பி. 1907)
2009 – வ. ஐ. சுப்பிரமணியம், தமிழக மொழியியலாளர் (பி. 1926)
2013 – மார்கரிதா ஏக், இத்தாலிய வானியற்பியலாளர் (பி. 1922)
2017 – சூலமங்கலம் ஜெயலட்சுமி, தமிழக கருநாடக இசைப் பாடகி (பி. 1937)
இன்றைய தின சிறப்பு நாள்
விடுதலை நாள் (சீசெல்சு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1976)
முன்னாள் படைத்துறையினர் நாள் (நெதர்லாந்து)