ஒவ்வொரு பெளர்ணமிக்கு பின் வரும் அஷ்டமி தேய்பிறை அஷ்டமி ஆகும். அந்த நாள் ஸ்ரீ காலபைரவருக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். அப்போது நம் குறை தீர வேண்டிக் கொண்டு ஸ்ரீ காலபைரவருக்கு விரதம் மற்றும் வழிபாடு நடத்தினால் மிக சிறப்பான பலன்களை வாரி வழங்குவார்.

அதிலும் நாளை செவ்வாய்கிழமையில் தினத்தில் வருகிற ஆனி தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷமான தினமாக இருக்கிறது.

ஆனி மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாகும். அதிலும் அந்த தேய்பிறை அஷ்டமி செவ்வாய்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானதாகும். தேய்பிறை அஷ்டமி அன்று ராகு கால நேரமான 3 மணியிலிருந்து 4.30 மணிக்குள்ளாக சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் அல்லது சிவன் கோயிலில் இருக்கின்ற சந்நிதிக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி, செவ்வரளி மலர் மாலை சாற்றி, செவ்வாழை நைவேத்தியம் செய்து, தனித்தனியாக ஐந்து வகையான எண்ணெய்கள் ஊற்றிய ஐந்து தீபங்கள் ஏற்றி சொர்ணாகர்ஷண பைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது.

 மேற்கண்ட முறையில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியன்று சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடுபவர்களுக்கு சிறிது காலத்திலேயே எப்படிப்பட்ட பணக்கஷ்டங்களும் நீங்கும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் விரைவில் கட்டி தீர்த்துவிட முடியும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புதிய வீடு, மனை, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப பொருளாதார நிலை உயரும். வீண் செலவீனங்கள் ஏற்படாது. தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.