ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த மோசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் மாவு அரைத்தல் மற்றும் செக்கு எண்ணெய் ஆலை நடத்திவருகிறார். இவரது மகள் ஹரிணி (வயது 17), திமிரியை அடுத்த தாமரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தந்தைக்கு உதவியாக மாவு மில் மற்றும் செக்கு ஆலை ஆகியவற்றை கவனித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் தேங்காய்களை செக்கு எந்திரத்தில் போட்டு எண்ணெய் தயாரிக்கும் வேலை ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராத நிலையில் எந்திரத்தில் அவரது கை சிக்கியுள்ளது. இதனால் கை துண்டாகி ரத்த வெள்ளத்தில் துடித்து உள்ளார். ஹரிணியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.