வேலூர் மின் பகிர்மான வட்டம் சோளிங்கர் கோட்டத்தை சேர்ந்த பனப்பாக்கம், பெருவளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நாளை (8 ம் தேதி) நடக்கவுள்ளது.

இதையொட்டி நல்லூர் பேட்டை, பனப்பாக்கம், நெடும்புலி, மேலபுலம்,
ஜாகீர் தண்டலம், ரெட்டி வலம், அகவலம், தென் மாம்பாக்கம், பெருவளையம், சிறு வளையம், துறையூர், உளியநல்லூர், கர்ணாவூர், பள்ளிப்பட்டறை உள்ளிட்ட கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.