காவேரிப்பாக்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடை பெறுகிறது. இதில் 150 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், மளிகை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இச்சந்தைக்கு அத்திப்பட்டு, திருப்பாற்கடல், கட்டளை, ஆலப்பாக்கம், கன்னிகாபுரம்,சேரி அய்யம்பேட்டை, ராமாபுரம், சுமைதாங்கி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் சில மாதங்களாக இந்த சந்தைக்கு வரும் பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து பல புகார்கள் காவேரிப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் தொடர்ந்து வந்தது. எஸ்பி தீபாசத்யன் உத்தரவின்படி. நேற்று முன்தினம் நடை பெற்ற சந்தையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். செல்போன் திருடு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும், திருடர்களை கண்டுபிடித்து செல்போன்களை உரிய வர்களுக்கு மீட்டுத்தர வேண்டு மென்றும் பொது மக்கள் விரும்புகின்றனர்.