ஆற்காடு அடுத்த புன்னப்பாடி பாடசாலை தெருவை சேர்ந்த மாணவர் ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதி ரிசல்டுக்காக காத்துக்கொண்டுள்ளார். அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். இந்நிலையில் நேற்று 7ம் தேதி காலை வயிற்றுவலி யால் துடித்துள்ளார்.

வலி தாங்க முடியாமல் வீட்டில் உள்ள பெட்ரூமில் புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் நிர்மல்ராஜின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.