'Legislation to control population soon' - Union Minister information

இந்தியாவில் ஆண்டுதோறும் மக்கள் தொகை வெகுவாக அதிகரித்துவரும் நிலையில், 2027-ஆம் ஆண்டுக்குள், சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என ஐ.நா சபை தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது ஐ.நா.சபை கடந்த 2020ம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள்தொகை 2050ம் ஆண்டு 970 கோடியையும், 2100ல் 1,100 கோடியையும் எட்டும் எனக் கணித்துள்ளது.

மேலும் உலக மக்கள் தொகையில் சீனா 19 சதவீதத்தைக் கொண்டுள்ளது. உலக நிலப்பரப்பில் வெறும் 2 சதவீதம் மட்டுமே கொண்டுள்ள இந்தியா மக்கள் தொகையில் 18 சதவீதத்தை கொண்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய மக்கட்தொகை 139 கோடி ஆகும். இதே வேகத்தில் மக்கள் தொகை அதிகரித்தால், 2027-ம் ஆண்டில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளி மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் எனவும் கணித்திருந்தது. 

மேலும், 2100ம் ஆண்டுவாக்கில் இந்தியாவின் மக்கள் தொகை 1.5 பில்லியனாகவும், சீனாவின் மக்கள் தொகை 1 பில்லியனாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் தொகைக் கட்டுப்படுத்த அரசு விரைவில் சட்டம் கொண்டுவரும் ஒன்றிய அமைச்சர் பிரஹலாத் சிங் தெரிவித்துள்ளார். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ஒன்றிய அமைச்சர் பிரஹலாத் சிங், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மக்கள் தொகைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், விரைவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக சட்டம் கொண்டுவரப்பட்டும். மேலும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டால் மட்டுமே, அவை நடக்கும் எனத் தெரிவித்தார்.