பில்லி, சூன்யம், ஏவல் பில்லியாவது, சூன்யமாவது, ஏவலாவது என்ற உங்களின் முணுமுணுப்பு எங்களுக்கு கேட்கிறது. செவ்வாய் கிரகதிற்கே விண்கலம் அனுப்பி அங்கு நீர் இருக்கிறதா? 

உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று விஞ்ஞானம் அதிவேகமாக வளர்ந்து வரும் இக்காலத்தில் இதென்ன மூடப்பழக்கம், இது சாத்தியமா? என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது. இருப்பினும் சொல்ல வேண்டியவற்றை சொல்ல வேண்டும்

உதாரணத்திர்க்கென்று எடுத்துக்கொள்வோம், நாம் காணும் திரைப்படத்தில் நாயகன் என்று ஒருவர் இருந்தால், அவனுக்கு எதிரி என்று ஒருவன் இருப்பான். பிறப்பிருந்தால் இறப்பும் இருக்கும், நல்ல காலம் என்றிருந்தால், கெட்ட காலமும் இருக்கும், இப்படி எவ்வளவோ உதாரணங்களை சொல்லிக்கொண்டு போகலாம். 

ரத்தினசுருக்கமாகச் சொன்னால், சூன்யம் என்பது அனைவரையும் தாக்கி விடாது, என்று நம்புங்கள். ஒரு சிலர் இந்த சூன்யம் பீடிக்கப்பட்டதால் வாழ்வில் சீரழிந்துவிட்டேனே என்று புலம்புகிறார்களே அதில் உண்மையில்லையா.? உண்மைதான். சற்று குழப்பமாகத்தான் இருக்கும். இன்றைய யுகத்திலே பொறாமை என்பது ஏழைகளிடம் இருக்கிறது, 

நடுத்தரவர்கத்தினரிடம் இருக்கிறது, பணக்காரர்களிடம் இருக்கிறது. சில வக்கிரபுத்தி படைத்தவர்களுக்கு பிறர் சந்தோஷமாக இருந்தால் பிடிக்காது, செய்யும் செயல்களில் வெற்றி பெற்றால் பொறுக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட வக்கிரபுத்திக்காரர்களுடன், மந்திரதந்திரிகளும் சேரும்பொழுது நிலைமை மோசமாகி விடுகிறது.

அவ்வாறு, இந்த பில்லி,சூன்ய,ஏவலால் பாதிக்கப்பட்ட ஜாதகர்களின் பட்டியலே உள்ளது ஒருவரது ஜனன ஜாதகத்திலே பத்தாவது இடத்திலே சூரியன் , ஆறாவது இடத்திலே செவ்வாய் பனிரெண்டாவது இடத்திலே சனி, இரண்டாவது இடத்திலே ராகு இருக்கப்பிறந்தவர்களை கண்டிப்பாக பில்லி,சூன்யம்,ஏவல் பாதிக்கும், அப்படிப்பட்டவர்கள் தங்களது ஜாதகத்தையோ அல்லது பிறந்த தேதியையோ பிறரிடம் சொல்லக்கூடாது. இருப்பதிலேயே மிகமிக சக்திவாய்ந்த பரிகாரமாகக் கருதப்படுகிறது.

ஏனென்றால், இன்றைய நிலையில் உங்களது ஜாதகம் இல்லாதுபோனாலும் கூட, உங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம், ஏன்? பிறந்த இடத்தை வைத்தே கூட கணித்துவிடுகிறார்கள். அருமை அன்பர்களே, துளியளவும் கலங்காதீர்கள், அதற்கு ஒரு அருமையான, மிகவும் சுலபமான அதே சமயத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பரிகாரம் உள்ளது..

அது என்ன.?
உங்கள் ஊரிலே உள்ள "அய்யனார்" கோயில் அல்லது "காளி" கோயில் இருந்தால் இந்த பில்லி, சூன்யம், ஏவல் போன்றவைகளை "பஸ்பம்" செய்து விடும். ஒவ்வொரு செவ்வாய் தினத்தன்றும் நீங்கள் உங்கள் ஊரிலே இருக்கின்ற அய்யனாரிடமோ, காளியிடமோ சென்று மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்யும்பொழுது அதற்கு நல்ல பலன் கிடைக்கும். மேற்சொன்ன மூன்றும் உங்களை அண்டவே அண்டாது என்பது உறுதி. உங்களுக்கு வந்த வினைகளை மனஉறுதியுடன் தைரியமாக எதிர்த்து நிறு நோக்கும்போது அவையனைத்தும் தவிடு பொடியாகி காற்றில் தூசாக பறந்து மறைந்து விடும். என்பதிலும் அதன் பின் நீங்கள் பெரும் ஆனந்தம் அளவிட முடியாதது என்பதிலும் அணுவளவு கூட சந்தேகமே இல்லை இது உறுதி.

செய்வினை


சிலர் இன்றைய காலகட்டத்திலே, செய்வினை என்ற ஒன்று உண்டா? அது நிச்சயமாக உண்மையா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார்கள்.

இந்த கணினி யுகத்திலே, செய்வினை மூலம் நாம் நினைத்த மனிதரை ஆட்டிபடைத்து வெற்றிகொள்ளலாமே? அவர்களுக்கு செய்வினை வேலை செய்யவில்லையேன்றால், நமக்கு மட்டும் எப்படி,வேலை செய்கிறது என்பதெல்லாம் உங்கள் மனதில் எழும் கேள்விகள்.

முதலிலே நீங்கள் ஒரு விஷயத்தை உங்கள் மனதில் உள்வாங்க வேண்டும். செய்வினை என்பது என்னவென்றால் செய்தவினை.அதாவது, முற்பிறவியிலே யார் ஒருவர் மந்திரவாதியாக இருந்து, பல நல்ல குடும்பங்களைக் கெடுத்தாரோ, அவருக்கு இந்தப் பிறவியிலே செய்வினையில் அகப்படும் நிலை ஏற்படும்.அப்படியிருக்கின்ற அந்த கிரகத்தின் சாரத்தில்தான் அவர் பிறப்பார்.

அதுபோல செய்வினை செய்யத்தூண்டியவர், செய்வினை செய்து சந்தோஷப்பட்டவர், செய்வினை செய்து குடும்பத்தைச் சிதைத்தவர், அவர் தன் வாழ்நாளிலே கெட்ட நோக்கத்தோடு, செய்வினை செய்து பலரின் சொத்துக்களை அபகரித்தவர் என்று இவர்களை மட்டும்தான் செய்வினை இந்தப்பிறவியில் வதைக்கும், வாட்டும். "கத்தியை எடுத்தவன் கத்தியாலேயே அழிவான்" என்பது பழமொழ. அதுபோல, பாம்பாட்டிக்கு பாம்பால் மரணம்" என்பது ஒரு பழமொழி, காரணமின்றி காரியமில்லை ஒரு சில நேரங்களிலே.

ஒருசில நேரங்களிலே செல்வ செழிப்போடு இந்த குடும்பங்கள் திடீரென்று மோசமான பொருளாதார நிலைக்கு தள்ளப்பட்டு, அவர்கள் வறுமை நிலைக்குச் சென்று, இறுதியில் அவர்கள் கையேந்தும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

இதற்கு காரணம் என்ன? நல்ல நிலைமையிலிருந்த அவர்களுக்கு ஏன் இந்த திடீர் நிலை? அவர்களின் வீட்டைச் சுற்றி பார்க்கும்பொழுது தகடு இருந்தது, எலும்பு இருந்தது, வெட்டப்பட்ட எலுமிச்சம்பழம் இருந்தது, பொம்மை இருந்தது, என்றெல்லாம் கூறுகிறார்கள். 

இவையெல்லாம் உண்மையா. என்றால் உண்மைதான். இரவு என்று ஒன்று இருந்தால், பகல் என்று ஒன்று இருக்கும். பிறப்பு என்று ஒன்று இருந்தால், இறப்பு என்று ஒன்று இருக்கும். அதுபோல நல்ல சக்தி என்று இருக்கும் பொழுது ஏன்? தீய சக்தி இருக்காது.

இதற்கும் கணினி யுகத்திற்கும் என்ன சம்மந்தம்?வேறொன்றுமில்லை, கணினி யுகத்திலும் இந்நிலை தொடர்கிறதே, இன்றும் கூட அதைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கின்றோமே, அதுதான் சம்மந்தம். வழிவழியாக மந்திரவாதிகள் மலிவான பணத்திற்காக இந்த செய்வினையை செய்கிறார்கள். இது எந்த நேரத்தில் ஒரு மனிதனைத் தாக்குகிறது. லக்கனத்திலிருந்து மூன்றாவது இடத்திலே தசை நடக்குமானால், பனிரெண்டாவது இடத்திலே தசை நடக்குமென்றால், இது எல்லாம் மறைவான இடங்கள். மேலும், ராகு,சனி, கேது போன்ற துஷ்டமான தசைகள் நடப்புக்கு வரும்பொழுது, அவர்களெல்லாம் பாதகாதிபதிகளாக இருந்தால், இந்தச் செய்வினையை செய்பவர்களிடம் இந்த ஜாதகம் அகப்படும்.

அவர்கள், இவர்களை வதைப்பார்கள், ஏனென்றால், முற்பிறவியிலே, இவரால் நசுக்கப்பட்டவர்கள், இவரால் சிதைக்கப்பட்டவர்கள் ஏராளம், பாவத்தின் விளைவிலே பிறந்த இவர்களுக்கு செய்வினை வேலை செய்யும்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே நாம் சிக்கிக்கொண்டால், முற்பிறவியில் செய்தது, இந்த பிறவியில் தாக்குமா? இந்தப் பிறவியில் நாங்கள் நன்றாகத்தானே இருக்கின்றோம், நல்லதுதானே செய்கின்றோம், எங்களை ஏன் செய்வினை தாக்குகிறது. என்று துன்பப்படும் அன்பர்களுக்கு, ஒரு சக்தி பரிகாரம் உள்ளது.

செய்வினை போன்றதொரு சூழ்நிலையில் அகப்பட்டுக்கொண்டால், சில குறிப்புகள் கண்ணுக்கு புலப்படும். அது வேறொன்றுமில்லை, அதாவது, நாம் நல்ல நிலையிலே இருப்போம், ஏதோ ஒன்று நம் காதிலே வந்து பேசி நம்மை துஷ்டமான நிலைக்கு இழுத்துச்செல்லும், இப்படிப்பட்ட, நமக்கு ஆகாத நிலைக்கு அழுத்தப்பட்டு, அதனால் தூண்டப்பட்ட, நாம் நடக்கும்பொழுது செய்வினை தோஷம் நம்மை தாக்குகிறது என்று நாம் புரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட செய்வினை தோஷங்களிலிருந்து தப்பிக்க, மூன்று தெய்வங்களை நீங்கள் வணங்கிவரும்பொழுதுஇந்தத்தாக்கம் படிப்படியாகக் குறைந்து, மறைந்து இறுதியில் உங்களை விடுதலைப் பெறச்செய்கிறது. 

அது, ஒன்று ஆஞ்சநேயரை செய்வினைக்காலங்களில் கண்டிப்பாக நீங்கள் வணங்க வேண்டும், குறிப்பாக சனி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் வணங்க எப்பேற்பட்ட செய்வினை தோஷமும் கட்டுப்படும.

அதே போன்று நரசிம்ம மூர்த்தியையும் வணங்கவேண்டும். நரசிம்மரும் செய்வினையைக் கசக்குவார், போசுக்குவார். மேலும், இந்த செய்வினைகளிலிந்து காப்பாற்றக்கூடிய அதிசக்தி படைத்தவர் நரசிம்மர். இவரைக் கண்டாலே செய்வினை அலறும். மேலும், பத்ரகாளி என்று வணங்கப்படும் 

"பிருத்தியங்கிரா" தேவியை வணங்க, இந்தச் செய்வினை கட்டுப்படும், என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. வக்ரகாளியை நீங்கள் வணங்கினாலும் கூட, இந்த செய்வினை தோஷம் கட்டுப்படும். அதன் மூலம் அனைவரும் பலன் பெற வேண்டும்.