குறள் : 795

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்

மு.வ உரை :

நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.

கலைஞர் உரை :

தவறு செய்கின்றவர் கண்ணீர் விடுமளவுக்குக் கண்டித்து, அறிவுரை வழங்கக் கூடிய ஆற்றலுடையவரின் நட்பையே தெளிவான நட்பாக எண்ண வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை :

நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.

Kural 795

Azhachcholli Alladhu Itiththu Vazhakkariya
Vallaarnatapu Aaindhu Kolal

Explanation :

You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach you (the ways of) the world.


Horoscope Today: Astrological prediction for June 29, 2022



இன்றைய ராசிப்பலன் - 28.06.2022 | Indraya Rasi Palan


இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

29-06-2022, ஆனி 15, புதன்கிழமை, அமாவாசை திதி காலை 08.22 வரை பின்பு வளர்பிறை பிரதமை. திருவாதிரை நட்சத்திரம் இரவு 10.08 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0.  

இராகு காலம் | Indraya Nalla neram 

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

இன்றைய ராசிப்பலன் - 29.06.2022 | Today rasi palan - 29.06.2022

மேஷம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழிலில் வேலையாட்களின் பொறுப்பான செயல்பாடுகளால் லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் அதிகரித்தாலும் சற்று பார்த்து பழகுவது நல்லது. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் மேலோங்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற கடின உழைப்பு தேவை. குடும்பத்தில் பெண்கள் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலப் பலன் கிடைக்கும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத வகையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் கிட்டும்.

கன்னி

இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள்.

துலாம்

இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். தெய்வ தரிசனம் நிம்மதியை தரும்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.

தனுசு

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.

மகரம்

இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட வருமானம் சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

கும்பம்

இன்று நீங்கள் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவை பெறலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.

மீனம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001