குறள் : 788

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு


மு.வ உரை :

உடைநெகிழ்ந்தவனுடைய கை உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.


கலைஞர் உரை :

அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்.


சாலமன் பாப்பையா உரை :

பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.


Kural 788

Utukkai Izhandhavan Kaipola Aange

Itukkan Kalaivadhaam Natpu


Explanation :

(True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).

Horoscope Today: Astrological prediction for June 22, 2022


இன்றைய ராசிப்பலன் - 22.06.2022 | Indraya Rasi Palan

இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam

இன்றைய பஞ்சாங்கம்
22-06-2022, ஆனி 08, புதன்கிழமை, நவமி திதி இரவு 08.46 வரை பின்பு தேய்பிறை தசமி. நாள் முழுவதும் ரேவதி நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. தனிய நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Nalla neram 

மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

இன்றைய ராசிப்பலன் - 22.06.2022 | Today rasi palan - 22.06.2022

மேஷம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். பண நெருக்கடிகளை சமாளிக்க எந்த விஷயத்திலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். 

மிதுனம்

இன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்

இன்று நீங்கள் நிம்மதியின்றி காணப்படுவீர்கள். சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் இழுபறி நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் அனுகூலமான பலனை அடையலாம். பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாக கூடும். சுபகாரியங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். 

கன்னி

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். 

துலாம்

இன்று நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது மூலம் லாபம் அடையலாம். வேலையில் சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மகரம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

கும்பம்

இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தடைப்பட்ட சுபகாரியம் கை கூடும்.




கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001