மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை வழிகாட்டுதலுடன் இந்தியன்வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில் இலவச தொழிற்பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

சுயதொழில் தொடங்க வங்கிக்கடன் பெற ஆலோசனை வழங்கப்படுகிறது.

தொழில் பயிற்சி பெறுவோருக்கு உணவு, சீருடை ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

ஜூலை மாதம் இந்த நிறுவனத்தில் எம்பிராய்டரி பயிற்சி 30 நாட்களும், தோட்டம் மற்றும் இயற்கை கலை பயிற்சி 10 நாட்களுக்கும் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் சேருபவர்களின் வயது 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், ஆதார்கார்டு, குடும்ப கார்டு, பான் கார்டு மற்றும் கல்விச்சான்றுடன் ராணிப்பேட்டை நவல்பூரில் இயங்கிவரும் இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி முகாமில் அணுகி விண்ணப்பிக்கலாம். இத்தகவலை வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார்.