தமிழ் திரையுலகின் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் பூ ராமு. 2008-ம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் நீர்ப்பறவை, தங்க மீன்கள், பரியேறும் பெருமாள், பேரன்பு, கர்ணன், சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தார் பூ ராமு.

இதற்கிடையே, நடிகர் பூ ராமு உடல்நலம் குன்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பூ ராமு சிகிச்சை பலனின்றி காலமானார்.