பிராட்டிஸ்லாவா: ஐரோப்பாவில், ஸ்லோவாகியா நாட்டில் நடைபெறும்

குளோப்செக் - 2022' கருத்தரங்கில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பங்கேற்றார். அவரிடம் உக்ரைன் விவகாரத்தில் இந்தியா ஆதரவு தராமல் இருப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட் டது. அதற்கு ஜெய்சங்கர் கடுமையாக பதில் அளித்தார்.

ஒரு நிருபர், 'சீனா இப்போது இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தியிருந்தால், உக்ரைன் எல்லையில் ரஷ்யா தாக்கியதை ஆதரித்திருப்பீர்களா?" என்று கேட்டார். அதற்கு ஜெய்சங்கர் கூறியதாவது:
“Europe has to grow up that Europe problem is worlds problem and Worlds problems is not EU problem. We are not sitting on the fence we are standing on our ground.  Dr. S jai Shanker

இவ்வாறு இரண்டு வேறுவேறு விஷயங்களை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்துவது பொருத்தமற்றது. சீனா, இந்தியா இடையிலான எல்லை பிரச்னை பல மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது உக்ரைனில் எந்த பிரச்னையும் இல்லை. சீனா-இந்தியா உறவுகள் இறுக்கமாக உள்ளது உண்மை. அதை எங்களுக்கு கையாளத் தெரியும். அது, எங்களுக்கும் சீனாவுக்கும் உள்ள பிரச்னை, எந்த விவகாரத்தில், எந்த தருணத்தில், யார் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் என்று நாம் பார்க்கத் தொடங்கினால், ஐரோப்பா அமைதியாக இருந்த பல விஷயங்களை நானும் சுட்டிக்காட்ட முடியும். முதலில் ஐரோப்பா தனது மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். 'எங்கள் பிரச்னைதான் உலகப் பிரச்னை. ஆனால், உலகத்தின் பிரச்னை எங்கள் பிரச்னையே கிடையாது' என்ற மனநிலையை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் இவ்வாறு காட்டமாக பதில் அளித்தார்.