பனப்பாக்கம் அடுத்த ரெட்டிவலம் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் வாலாஜா அரசு கலைக் கல்லுாரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை கடந்த ஓராண்டாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை மாணவி தோழி வீட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் சொல்லி விட்டு சென்றுள்ளார்.

வெகுநேரம் ஆகியும் மாணவி வீடு திரும்பாத தால் அக்கம் பக்கத்திலும், உறவினர்கள் வீட்டிலும் தேடியும் அவர் கிடைக்க வில்லை. 

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நெமிலி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.