ஆற்காடு கண்ணமங்கலம் கூட்டுரோடு, ராதாகிருஷ்ணன் தெருவில் துரைசாமி செட்டியார் அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளி உள்ளது.
40 ஆண்டுகளுக்கு மேலாக இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியை ஸ்ரீவித்யா தனது சொந்த செலவில் பள்ளியை புதுப்பித்துள்ளார். தனியார்பள்ளிக்கு நிகராக வர்ணம் பூசி ஓவியங்கள் வரைந்து பூந் தோட்டமாக அழகுபடுத்தி உள்ளார்.
பள்ளியின் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. அதில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், டிஎஸ்பி பிரபு ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்கள். பின்னர் பள்ளியின் ஆசிரியை ஸ்ரீவித்யாவை பாராட்டினர்.
இதில் வட்டார கல்வி அலுவலர் ஆசிர்வாதம், ஆற்காடு நகராட்சி கமிஷனர் சதீஷ்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியை பத்மாவதி, ஆற்காடு நகராட்சி கவுன்சிலர்கள் விஜயகுமார், தட்சிணாமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் தயாளன், சுதாகர், இயற்கை ஆர்வலர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.