தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் வெங்கல்ராவ். நகைச்சுவை மன்னன் வடிவேலுவுடன் இணைந்த ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். ஸ்டண்ட் கலைஞரான இவர், 25 ஆண்டுகள் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். வடிவேலுவுக்கு சினிமாவில் நடிக்க தடை போட்டதற்கு பிறகு இவர் வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார்.

இதனால் வறுமையிலும் தவித்து வருவதாக சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியிலும் வெங்கல்ராவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த வெங்கல்ராவ், திடீரென ஐதராபாத்தில் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வெங்கல்ராவ், விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.