The van fell into a 15-foot ditch from the railway overpass
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கிருப்பில்ஸ்பேட்டையை சேர்ந்தவர் தினேஷ் குமார்(25). வேன் டிரைவர். ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள நிறுவனத்தில் பணி புரியும் அரக்கோணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்களை வேனில் அழைத்துச் சென்று வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல தொழிலாளர்களை அழைத்துச் செல்ல அரக்கோணம் பஸ் நிலையத்திற்கு வேனில் வந்தார்.
விண்டர்பேட்டை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு 15 அடி உயரம் கொண்ட பாலத்தில் இருந்து கீழே பாய்ந்தது. இதைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர் அரக்கோணம் டவுன் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வேன் டிரைவர் தினேஷ் குமார் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.
லேசான காயத்துடன் இருந்த அவர் உடனடியாக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். வேனில் டிரைவரை தவிர யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏதுமில்லை.