கலவை பஸ் ஸ்டாண்டிலிருந்து நேற்று மாலை 6.15 மணியளவில் அரசு டவுன் பஸ் புறப்பட்டு ஆற்காடு சென்று கொண்டிருந்தது.

வேலம் கிராமத்தை சேர்ந்த பாலகுமாரன் (45) டிரைவராகவும், செங்காடு கிராமத்தை சேர்ந்த செல்வம் (39) கண்டக்டராகவும் பணியில் இருந்தனர்.

பஸ் 6.45 மணியளவில் ஒழலை வழியாக சென்று கொண்டிருந்தபோது சாலையில் சில வாலிபர்கள் டூவீலர்களை நிறுத்தி விட்டு அருகில் மது அருந்திக்கொண்டிருந்தனர்.

பஸ் டிரைவர் பாலகுமாரன் ரோட்டில் நிறுத்தி யுள்ள டூவீலர்களை ஓரமாக நிறுத்துமாறு வாலிபர்களை வலியுறுத்தியுள்ளார். அப்பொழுது வாலிபர்களுக்கும், பாலகுமாரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 8 வாலிபர்களும் பாலகுமாரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். காய மடைந்த அவர் ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாலகுமாரன் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 8 வாலி பர்களை தேடிவருகின்றனர்.