ஆரணியில் உள்ள ‘நியூ 5 ஸ்டார் எலைட்' அசைவ ஓட்டலில், கடந்த 24ம் தேதி தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால், பிளஸ் 2 மாணவன் திருமுருகன் (17) இறந்ததாக ஆரணி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் அவருடைய தந்தை புகார் கொடுத்தார்.
இதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரி கைலேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப் பட்ட 2 ஓட்டல்களிலும் நேற்று முன்தினம் ரெய்டு நடத்தினர். அதில் சுகாதாசுகாதாரமற்ற முறையில் இறைச்சி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஆரணி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ‘நியூ 5 ஸ்டார் எலைட்' ஓட்டலை மூடும் படி அதிகாரிகள் அவசர தடை ஆணை பிறப்பித்தனர். தொடர்ந்து, உணவு பாதுகாப்பு இயக்குனர் அலுவலகத்திலிருந்து மறு உத்தரவு வரும் வரை ஓட்டலை திறக்கக்கூடாது எனக்கூறி, தடையாணை நகலை ஓட்டல் உரிமை யாளரிடம் வழங்கிய அதிகாரிகள், ஓட்டலை இழுத்து மூடினர்.