குறள் : 787
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு
மு.வ உரை :
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி நல்ல வழியில் நடக்கச் செய்து அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.
கலைஞர் உரை :
நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.
சாலமன் பாப்பையா உரை :
அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.
Kural 787
Azhivi Navaineekki Aaruyththu Azhivinkan
Allal Uzhappadhaam Natpu
Explanation :
(True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way and in case of loss if shares his sorrow (with him).
Horoscope Today: Astrological prediction for June 21, 2022
இன்றைய ராசிப்பலன் - 21.06.2022 | Indraya Rasi Palan
இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam
21-06-2022, ஆனி 07, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி இரவு 08.31 வரை பின்பு தேய்பிறை நவமி. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 05.03 வரை பின்பு ரேவதி. அமிர்தயோகம் பின்இரவு 05.03 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. பைரவர் - முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் | Indraya Nalla Neram
மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
இன்றைய ராசிப்பலன் - 21.06.2022 | Today rasi palan - 21.06.2022
மேஷம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
ரிஷபம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.
கடகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களுடன் மன ஸ்தாபங்கள் உண்டாகும். மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.
கன்னி
இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கடன் பிரச்சினைகள் தீரும்.
துலாம்
இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிடைக்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும்.
தனுசு
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனை நற்பலனை கொடுக்கும். ஆரோக்கியம் சீராகும்.
மகரம்
இன்று உங்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
கும்பம்
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் மனஉளைச்சலை கொடுக்கும். உறவினர்கள் ஓரளவிற்கு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
மீனம்
இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001