குறள் : 771

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை

முன்நின்று கல்நின் றவர்


மு.வ உரை :

பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள் என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.


கலைஞர் உரை :

போர்களத்து வீரன் ஒருவன், பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர் என முழங்குகிறான்.


சாலமன் பாப்பையா உரை :

பகைவர்கேள! என் அரசின் முன்னே போரிட நிற்காதீர்; உங்களைப் போலவே இதற்கு முன்பு பலர் நின்றனர்; எல்லாம் மறைந்து இப்போது நடுகல்லில் சிலையாக நிற்கின்றனர்.


Kural 771

Ennaimun Nillanmin Thevvir Palarennai

Munnindru Kalnin Ravar


Explanation :

O my foes stand not before my leader; (for) many are those who did so but afterwards stood (in the shape of) statues.


Horoscope Today: Astrological prediction for June 05, 2022

இன்றைய ராசிப்பலன் - 05.06.2022 | Indraya Rasi Palan

இன்றைய பஞ்சாங்கம் | Indraya Panchangam



05-06-2022, வைகாசி 22, ஞாயிற்றுக்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை சஷ்டி திதி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 12.25 வரை பின்பு மகம். சித்தயோகம் இரவு 12.25 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். 

இராகு காலம் | Indraya Nalla Neram

மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00. 

இன்றைய ராசிப்பலன் - 05.06.2022 | Today rasi palan - 05.06.2022

மேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்றாலும் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம்

இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை பலப்படும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

மிதுனம்

இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பண நெருக்கடியை சமாளிக்க சிக்கனமுடன் இருப்பது நல்லது. அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.

கடகம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் முன்னேற்ற நிலை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். 

சிம்மம்

இன்று குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியுடன் எடுத்த காரியத்தை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கன்னி

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக வெளியூர் நபர்களால் அனுகூலம் கிடைக்கும்.

துலாம்

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மன அமைதி குறையும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு

இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

மகரம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பாதியில் தடைபட்ட காரியம் மீண்டும் தொடரும்.

கும்பம்

இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மீனம்

இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் சேமிக்க முடியும்.

கணித்தவர்

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091 7200163001. 9383763001