அயம் என்றால் இரும்பு . இரும்பு சத்து நமக்கு தேவை..

ஆனால் அதை அப்படியே சாப்பிட முடியாது. வெந்த அல்லது பஸ்மமாக்கப்பட்ட இரும்பைதான் சாப்பிடமுடியும் அதுதான் அய செந்தூரம்.

இறைவன் சாப்பிடத்தக்க அயத்தை வெந்தயமாகக் கொடுத்துள்ளான். நம் தமிழ்.முன்னோர்கள் மருத்துவ அறிவினால் இதை உணர்ந்து "வெந்த + அயம் = வெந்தயம் என அதற்கு பெயர் வைத்தனர்

இரும்பு சத்து குறைபாடே நீரிழிவின் காரணமாய் இருப்பதால் வெந்தயம் பரிந்துரைக்கபடுகிறது.

கோடைகாலத்தில் வெப்பத்தால் வரும் நோய் அம்மை. அதற்கு வெப்பை நீக்கும் இலையால் குணப்படுத்த வேண்டும். வேப்பிலை வெப்பம் நீக்கி குணப்படுத்துவதை அறிந்து "வெப்பம் + இல்லை = வேப்பிலை எனப் பெயரிட்டனர்.

அடிவயிற்றில் ஆண்களுக்கும் கருப்பப்பை சுற்றியுள்ள பெண்களுக்கான பகுதியில் உருவாகும் வெப்பம் பல வேண்டத்தகாத வயிற்று மற்றும் கருமண்டலக் கோளாறுகளை உருவாக்குகிறது.

இதை நீக்குவதை ஆராய்ந்து அறிந்த தமிழ்ச் சான்றோர்."கரு + வெப்பம் + இல்லை = கருவேப்பிலை.! எனப் பெயரிட்டனர்

உடலின் உட்பகுதியில் உள்ள வெப்பத்தைத் தணித்து இராஜ உறுப்புகளை காப்பதால் "சீர் + அகம் = சீரகம் எனவும்

காயத்தின் (உடலின்) காற்றை வெளியேற்றுவதால் பெருங்காயம் என்றும்

இதை நீ உண்டால் உடல் பொன் ஆகும் காண்நீ .என்பதனால்  
"பொன் + ஆம் + காண் + நீ = பொன்னாங்கண்ணி என்றும்

காய்ச்சிய எண்ணெய் கூந்தலில் தேய்த்தால் கூந்தலை கரிசலாக்கும் காண்நீ. என்பதனால் "கரிசல் + ஆம் + காண் + நீ = கரிசலாங்கண்ணி என்றும்

உடலின் உள்ளே அகத்தின் தீயைக் குறைப்பதால்  
"அகம் + தீ : அகத்தீ எனவும்

உடலின் வெம்மையைப் போக்குவதால் "வெம்மை + காயம் : வெங்காயம்

என பல சொற்களுக்குள் தான் மருத்துவத்தை வைத்தார்கள் நமது மகத்தான பாட்டன்மார்கள்.!

"செம்மொழி" தமிழ்ச் சொற்களை மறந்தோம்.!

நமது பாரம்பரிய மருத்துவத்தை மறந்தோம்..!!