சனிபகவான் விரையில் வக்ரநிலையில் சஞ்சரிக்கப் போகிறார்."


சனி வக்கிரமடைவதால் சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம்.

ஜூன் 5ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரைக்கும் சுமார் 141 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கப்போகும் சனிபகவானால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

🔯 Sani Vakra Peyarchi 2022 - மேஷம்


பொறுமை அவசியம். வேலையில் பளு அதிகரிக்கும். புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். சுய தொழில் செய்பவர்கள் பணத்தை அதிகம் முதலீடு செய்ய வேண்டாம். உழைப்பு அதிகமாக இருந்தாலும் ஊதியம் குறைவாகவே இருக்கும். 

🔯 Sani Vakra Peyarchi 2022 - ரிஷபம்


வக்ர மடைந்துள்ள இந்த கால கட்டத்தில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உடன் பிறந்தவர்களால் மன வருத்தங்கள் எற்படும். தடைகள் நிவர்த்தியாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துக்கள் எற்படலாம்.

🔯 Sani Vakra Peyarchi 2022 - மிதுனம்


சனிபகவானால் உங்களுக்கு எந்த பாதிப்பு இல்லை நன்மையே அதிகம் நடக்கிறது. புதிய வேலை கிடைக்கும். சுபகாரியங்களால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் நன்மைகள் அதிகம் நடக்கும். கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்வீர்கள். நோய் பாதிப்புகளால் சிலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கும். கவனம் தேவை.

🔯 Sani Vakra Peyarchi 2022 - கடகம்


அஷ்டமத்து சனி ஆட்டிப்படைத்துக்கொண்டு உள்ளது. நான்கு மாத காலம் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுங்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும்.

திருமணம் நடைபெறும். தேவையில்லாத ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள். கோவில்களுக்கு சென்று இஷ்ட தெய்வங்களை வழிபடுவதன் மூலம் கஷ்டங்கள் காணாமல் போகும்.

🔯 Sani Vakra Peyarchi 2022 - சிம்மம்


கண்ட சனி கழுத்தை நெரித்திருக்கும். இந்த நான்கு மாத காலம் நிம்மதியாக இருங்கள். உடம்பிலும் மனதிலும் உற்சாகம் அதிகரிக்கும் சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். காதல் கைகூடும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். வேலை மாற்றம் ஏற்படும் யோசித்து செயல்படுவீர்கள். இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாதீர்கள் 

🔯 Sani Vakra Peyarchi 2022 - கன்னி


சனிபெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. சனி வக்ரமாகும் இந்த கால கட்டத்தில் சொந்த வீடு, வண்டி வாகனங்கள் வாங்கலாம். சக ஊழியர்களால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் சில வில்லங்கம் எட்டிப்பார்க்கும் கவனம் தேவை. படிப்புக்காக குழந்தைகளை விட்டு பிரியும் காலம் இது.

🔯 Sani Vakra Peyarchi 2022 - துலாம்


பூர்வ புண்ணிய சனியால் சில சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு சில மாதங்கள் நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உல்லாச பயணங்களினால் உற்சாகம் அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும்.

🔯 Sani Vakra Peyarchi 2022 - விருச்சிகம்


அர்த்தாஷ்டம சனியால் ஆட்டிப்படைக்கப்பட்டிருந்த நீங்கள் இந்த நான்கு மாத காலத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருப்பீர்கள். கொடுத்த பணம் வராது என்று நினைத்த நிலையில் உங்களுக்கு வந்து சேரும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடைபெறும். 

🔯 Sani Vakra Peyarchi 2022 - தனுசு


கடன் கொடுத்து பணத்தை தராமல் இழுத்தடித்தவர்கள் பணத்தை தேடி வந்து கொடுப்பார்கள். எதிர்பாராத பணவரவு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. உடல் உழைப்பு கூடும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

🔯 Sani Vakra Peyarchi 2022 - மகரம்


ஏழரை சனியில் பாத சனி நடைபெறுகிறது. உடல் நிலையில் பாதிப்பு அதிகம் இருந்தது. இந்த நான்கு மாத காலம் உடல் நிலைபாதிப்புகள் சற்று குறைய வாய்ப்பு உள்ளது. தொழில் வியாபாரத்தில் தேவையற்ற முதலீடுகளை தவிர்க்கவும். வேலைகளில் இழுபறி ஏற்படும்.

வேலை செய்யும் இடத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்படும் அவசரப்பட்டு வேலையை விட்டு விட வேண்டாம். அம்மாவின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். தேவையற்ற விசயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம்.

🔯 Sani Vakra Peyarchi 2022 - கும்பம்


தலைமேல் சனி அமர்ந்தது. ஜென்ம சனி காலம் நெருக்கடி மிகுந்த கால கட்டங்களை எல்லாம் தாண்டி வந்திருப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் இதுநாள் வரை இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும்.

புதிய சொத்துக்கள், வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்கள் ஆடைகள், பொன் நகைகள் வாங்குவீர்கள்.

🔯 Sani Vakra Peyarchi 2022 - மீனம்


ஏழரை சனி தொடங்கியுள்ளது. மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும் அரசு வழியில் நன்மைகள் நடைபெறும். பணவரவு அதிகரிக்கும் கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். விரைய செலவுகளை தவிர்த்து சுப செலவுகளாக மாற்றுங்கள். திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்குங்கள்..