ஆற்காடு அடுத்த தக்காங்குளம் கே.எம் இயற்கை வழி வேளாண் பண்ணையில் தொண்டை மண்டல விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் ஆற்காடு அரிசி மற்றும் விதைத்திருவிழா மற்றும் வேளாண் கண்காட்சி நேற்று தொடங்கியது.

கண்காட்சி மற்றும் ஆற்காடு அரிசி மற்றும் விதைத்திருவிழா தொடக்க விழாவில், ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லத் தலை வர் லட்சுமணன் தலைமை வகித்தார். கூட்டமைப் பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் விமல் ஜி. நந்தகுமார், கே.எம். இயற்கை வழி வேளாண் பண்ணை நிறுவனர் சாமுண்டீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பாலு வரவேற்றார். வேலுார் நறுவீ மருத்துவமனை தலைவர் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.

இந்த கண்காட்சியில் நெல், கரும்பு, தென்னை, கம்பு, சோளம், காய்கனி, இயற்கை உரங்கள், உழவுக் கருவிகள், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள், பாரம்பரிய வேளாண் உற்பத்தி உட் பட 120க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தது.

இதில், மேட்டுப்பாளையம் உயிராற்றல் வேளாண்மை பயிற்சி மைய பயிற்றுனர் நவநீத கிருஷ்ணன், சென்னை மண் வாசனை அமைப்பின் பிரதிநிதி மேனகா, இயற்கை விவசாய அமைப் பின் கீதா பிரியதர்ஷினி, பாரம்பரிய விதைகள் சேகரிப்பாளர் பிரியா, வெல்லுார் கிச்சன் ஹோட் டல் உரிமையாளர் புண்ணியகோட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.