World's Priciest Coffee Is Hand-Picked From Elephant Dung 

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபூமி என்றால் அது தாய்லாந்து நாடுதான். பசுமையான மலைப்பகுதியில் டிரெக்கிங் செல்வதற்கும், தாய்லாந்து நாட்டின் பாரம்பரியமான வாழ்க்கை முறையை ரசிப்பதற்காகவும், லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், தாய்லாந்துக்கு பயணிக்கின்றனர். அவர்கள் மறக்காமல் செய்யும் ஒரு காரியம், 'கறுப்புத் தந்த காபி'யை (Black Ivory coffee) சுவைப்பதுதான்.

இங்குள்ள மலைப் பகுதிகளில் வசிக்கும். மக்கள் தயாரிக்கும் காபி இது. ஒரு கப் காபியின் விலை 4 ஆயிரம் ரூபாய். இந்த காபியில் அப்படியென்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா? இந்த காபியானது. யானைகள் உட்கொண்டு, செரிமானம் ஆகாமல் வெளியேறும் காபி கொட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
தாய்லாந்து மக்களால் 'கறுப்புத் தந்தக் காபி' என்று அழைக்கப்படும் இந்தக் காபியை தயாரிக்கும் விதமும் வித்தியாச மானதுதான். மலைகளில் விளையும் உயர் ரக காபிப் பழங்களை, பறித்து யானைகளுக்கு உணவாக்குகின்றனர்.

காபிப் பழங்களை யானைகள் ஆர்வமுடன் உண்ணும். செரிமானம் ஆகாத காபிக்கொட்டைகள், யானையின் இரைப்பையில் 15-30 மணி நேரம் வரை இருப்பதால், இரைப்பையின் அமில சுரப்பில் காபிக்கொட்டைகளில் உள்ள கசப்புத் தன்மைக்கு காரணமான புரதம் நீங்கிவிடும். பின்னர் கழிவுகளுடன் வெளியேறும் காபிக்கொட்டைகளை சேகரித்து, சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துகின்றனர்.

ஒரு கிலோ கறுப்புத் தந்த காபி தயாரிக்க, 33 கிலோ காபிப் பழங்கள் தேவைப்படுமாம். இதனால்தான் ஒரு கப் காபி 4 ஆயிரம் ரூபாய். அந்த ஊர் மாஸ்டர், இந்த காபியில ஒன் பை கொடுப்பாரா?