ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி ஒரு சிறந்து இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அவ்வகையில் 2021ம் ஆண்டுக்கான இவ்விருதுக்கு இதழியலாளர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருதில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன்,பாராட்டு சான்றும் அடங்கும்.

விண்ணப்பத்தாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிபவராக இருக்க வேண்டும். இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றியிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் எழுத்துக்கள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துறையின் அடிப் படையிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம். இதற்கென அரசால் அமைக் கப்பட்டுள்ள தேர்வு குழு வின்முடிவே இறுதியானது.

மேற்காணும் தகுதிகளை கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலை மைச்செயலகம், சென்னை 600009 என்ற முகவரிக்கு வரும் 30.04.2022க்குள்ளாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ் கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.