வாலாஜா இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் முருகையா (58), கூலித்தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் பாலாறு அணைக்கட்டு பகுதியில் மீன் பிடிக்க சென்றார். மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் தவறி விழுந்தார். தண்ணீரில் தத்தளித்தபடி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்க முயன்றனர். அதற்குள் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகலவறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்ப திந்து விசாரித்து வருகின்றனர்.