வாலாஜாவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் இங்குள்ள அணக்கட்டு சாலை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த ஒருசில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். 

விரட்டி சென்றதில் ஒருவர் சிக்கினார். அவரிடம் விசாரணை செய்ததில் வாலாஜா அடுத்த குடிமல்லுர் காலனியை சேர்ந்த விஜய்(27) என தெரிய வந்தது. இவர் இளைஞர்களுக்கு கஞ்சா போதைப் பொருள் அவ்வப்போது விற்பனை செய்து வந்தாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய்யை கைது செய்தனர். ஏற்கனவே இவர் கஞ்சா போதைப்பொருள் பதுக்கியதாக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.