ஆற்காடு தோப்புக்கானா கங்காதர ஈஸ்வரர் கோயிலில் நடை பெற்று வரும் பிரமோற்சவ விழாவின் ஒரு பகுதியாக இன்று தேரோட்டம் நடை பெறுவதை முன்னிட்டு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஆற்காடு தோப்புக்கானாவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் பிரசித்தி பெற்ற கங்காதர ஈஸ்வரர், வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 7ம் தேதி முதல் பிரமோற்சவவிழாதொடங்கி நடைபெற்று வருகிறது.
வரும் 21ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின் ஒரு பகுதியாக இன்று திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு ஆற்காடு தோப்புக்கானா ஈஸ்வரன் கோயில் தெரு. ஆரணி ரோடு, ஜீவானந் தம் சாலை, தொல்காப்பியர் தெரு, புதிய வேலூர் மெயின் ரோடு, பஜார் வீதி ஆகிய இடங்களில் இன்று காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது என ஆற்காடு மின் கோட்ட செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.