★ 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலிய தனிநாயகம் அடிகளார் பிறந்தார்.

🚉 1870ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி உலகின் முதலாவது சுரங்க ரயில் சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.

👉 1934ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார்.

👪 1790ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி அமெரிக்காவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இடம்பெற்றது.


முக்கிய தினம் :-

தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம்
✏ வண்ணம் தீட்டுவது சிறுவர்களுக்கிடையே இருக்கும் மிகவும் பிரபலமான ஒன்று. ஆனால் இதில் பெரியவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பல உளவியல் மருத்துவர்கள் மன அழுத்தத்தை குறைக்க சிறந்த மருந்தாக வண்ணம் தீட்டுவதை கூறுகின்றனர்.

✏ அதனால் தற்போது இது மிகவும் பிரபலமாகி வருகிறது. இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் வருடந்தோறும் ஆகஸ்ட் 2ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.


நினைவு நாள் :-

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்
📞 தொலைபேசியை கண்டறிந்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார்.

📞 இவரது குடும்ப நண்பரான அலெக்ஸாண்டர் கிரகாம் என்பவரின் பெயரையும் இணைத்து அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் என்று இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது.

📞 பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அனுப்பினார். அதேபோல பேசுவதையும் அனுப்பலாமே என்று சிந்தித்து ஆராய்ச்சியில் இறங்கினார்.

📞 1876ஆம் ஆண்டு உலகிலேயே முதன்முதலாக தனது உதவியாளர் வாட்சனிடம் தொலைபேசியில் பேசினார். பிறகு 1877ஆம் ஆண்டு வாட்சனுடன் இணைந்து பெல் தொலைபேசி கம்பெனியை தொடங்கினார்.

📞 ஏறக்குறைய 60 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெற்றார். தகவல் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்திய இவர் தனது 75வது வயதில் 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-

பிங்கலி வெங்கய்யா
🏁 இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கய்யா 1876ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் பிறந்தார்.

🏁 இவர் வைரச் சுரங்கம் தோண்டுவதிலும், பருத்தி ஆராய்ச்சியிலும் சாதனை படைத்ததால் 'வைரம் வெங்கய்யா' மற்றும் 'பருத்தி வெங்கய்யா' என்றும் அழைக்கப்பட்டார்.

🏁 கல்கத்தாவில் 1906-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஆங்கிலேய அரசின் யூனியன் ஜாக் கொடி ஏற்றதை பார்த்து நம் நாட்டிற்கும் கொடி வடிவமைப்பது குறித்து காக்கிநாடாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் சந்திப்பின்போது, வலியுறுத்தினார். 

🏁 காந்தி, கொடியை வடிவமைக்கும் பொறுப்பை இவரிடமே ஒப்படைத்தார். பல நாடுகளின் கொடிகளை ஆராய்ச்சி செய்து விஜயவாடா தேசிய மாநாட்டின்போது சிவப்பு, பச்சை நிறங்கள் கொண்ட கொடியை வெங்கய்யா அறிமுகப்படுத்தினார். 

🏁 கொடியில் அசோக சக்கரத்தை சேர்க்கலாம் என்று ஜலந்தரை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் என்பவர் ஆலோசனை கூறினார். அமைதியைக் குறிக்கும் வெண்மை நிறத்தை சேர்க்கலாம் என்று காந்திஜி கூற, மூவர்ணங்கள் கொண்ட தேசியக் கொடியை வெங்கய்யா வடிவமைத்தார்.

🏁 கராச்சியில் 1931-ல் நடந்த அகில இந்திய மாநாட்டில் இந்தக் கொடியை அனைவரும் ஒருமனதாக ஏற்றனர். முதலில் கொடியின் நடுவில் ராட்டை இருந்தது. பிறகு அதற்கு பதிலாக அசோக சக்கரம் சேர்க்கப்பட்டது.

🏁 நாட்டின் முன்னேற்றத்துக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட பிங்கலி வெங்கய்யா 86வது வயதில் (1963) மறைந்தார்.