குறள் : 461
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.
மு.வ உரை :
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும் பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
கலைஞர் உரை :
எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை :
ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.
Kural 461
Azhivadhooum Aavadhooum Aaki Vazhipayakkum
Oodhiyamum Soozhndhu Seyal
Explanation :
Let a man reflect on what will be lost what will be acquired and (from these) what will be his ultimate gain and (then let him) act.
இன்றைய பஞ்சாங்கம்
30-07-2021, ஆடி 14, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 05.41 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. ரேவதி நட்சத்திரம் பகல் 02.02 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் பகல் 02.02 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 30.07.2021
மேஷம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் வீண் அலைச்சல் உண்டாகும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் தேவை.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும்.
மிதுனம்
இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த டென்ஷன்கள் விலகி நிம்மதி ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.
கடகம்
இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
சிம்மம்
இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் தடை தாமதம் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 02.02 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய முயற்சிகளை மதியத்திற்கு பிறகு தொடங்குவது நல்லது.
கன்னி
இன்று உங்கள் ராசிக்கு பகல் 02.02 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. ஆரோக்கிய ரீதியாக சிறு பாதிப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்கின்ற போது கவனம் தேவை.
துலாம்
இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் பெறுவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளி வேலைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும்.
தனுசு
இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
மகரம்
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.
கும்பம்
இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.
மீனம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வங்கி சேமிப்பு உயரும்.