ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த மேற்கு பாறைமேடு பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட இருளர் இனத்தைச் சார்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்

இந்த நிலையில் இவர்களது கிராமத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு செல்ல பயன்படுத்தி வந்தா பொது வழி சாலையினை அப்பகுதி சேர்ந்த ரமேஷ் என்ற ஹோட்டல் உரிமையாளர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடத்தை கட்டி வருகிறார்

இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் பொது வழி சாலை ஆக்கிரமிப்பு செய்துவரும் ரமேஷ் மீது வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாகவும் புகார் தெரிவித்த பொதுமக்களை ரமேஷ் சாதிரீதியாக திட்டியும் அவர்கள் மீது காவல் நிலையங்களில் பொய் வழக்கு கொடுத்து அவர்களை மிரட்டி வருவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

மேலும் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருகை தந்து பொது வழியை ஆக்கிரமிப்பு செய்தும் பொதுமக்கள் மீது பொய்யான வழக்கு கொடுத்து மிரட்டி வரும் ரமேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவினை வழங்கியுள்ளனர்