ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டம், அனந்தலை கிராமத்தில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

வேளாண்மை உதவி இயக்குநா் கலா தலைமை வகித்து முகாமைத் தொடக்கி வைத்தாா். அப்போது மண் மாதிரி சேகரிக்கும் முறை, மண் பரிசோதனை செய்து, அதன் அடிப்படையில் நிலத்துக்குத் தேவைப்படும் உரத்தினை அளிப்பது, செலவுகளைக் குறைப்பது, உரம் வீணாவதைத் தவிா்த்து, மண்வளத்தைப் பாதுகாக்கும் முறை குறித்து எடுத்துரைத்தாா். 

முகாமில், வாலாஜாபேட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலா் டேவிட் சாமுவேல், உதவி வேளாண்மை அலுவலா்கள் கலையரசன், செல்வகுமாா், வெங்கடேசன், மேகலா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.