வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூர் கிராமத்தில் தரமற்ற பொருட்கள் வழங்கியதால் நியாயவிலை கடையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதி பெண்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகுர் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் தரமற்ற அரிசியை வழங்கியதாக அப்பகுதி பெண்கள் நியாயவிலைக் கடை காரரிடம் கேட்டதற்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் நியாயவிலை கடையை முற்றுகையிட்டு பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வாலாஜா பேட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், அதில் சமரசம் கிட்டவே சாலை மறியல் கைவிடப்பட்டது, இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது