அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த தேர்தலில் ஜோபைடன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதில் இவர் முறைகேடு செய்ததாகவும், இவரது வெற்றி செல்லுபடியாகாது எனவும் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டிவந்தார். டிரம்பின் ஆதரவாளர்களும் கண்ட ஆர்ப்பட்டங்களை நடத்திவந்தனர்.

 
இந்நிலையில், வாஷிங்கடனில் கேபிட்டல் கட்டடத்தில் எல்க்டோரல் காலேஜ் ஓட்டுகளை பரிசீலனை செய்து சான்றிதழ் அளிக்கும் பணி தொடங்கியது. இந்த பணி நடைபெற்றால் ஜோ பைடன் வெற்றியாளர் என தீர்மானிக்கப்படுவார். இதனை தடுக்கும் விதமாக டிரம்பின் ஆதரவாளர்கள் கேபிட்டல் கட்டத்திற்குள் நுழைந்தனர்.

இவர்களை தடுத்து நிறுத்த பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அதில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் பெண் ஒருவர் பலியானார். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் தற்போது பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதுகாப்பு வீரர்கள் பலரும் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.