வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பெட்ரோல் நிரப்பி விட்டு வந்த ராயல் என்ஃபீல்டு பைக் தீப்பற்றி எரிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
சேட்டிகுப்பதை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் ஐந்து நாட்களுக்கு முன்பு பழைய ரோயல் என்பீல்டு 350cc வாகனத்தை வாங்கியுள்ளார், குடியாத்தம் ஆம்பூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிய சந்தோஷ்குமார் அங்கிருந்து புறப்பட்டு சுமார் 100 அடி தொலைவில் வந்தபோது வாகனத்தின் முன்பக்க தீப்பற்றிக் அதை கவனித்துவிட உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவர் சலை ஓரமாக பைக்கை நிறுத்திவிட்டு தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார் அவர்கள் வருவதற்குள் பைக் முழுவதும் தீப்பற்றி எரிந்து தீக்கிரையானது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.