குறள் : 249
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
மு.வ உரை :
அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால் அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.
கலைஞர் உரை :
அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்.
சாலமன் பாப்பையா உரை :
மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.
Kural 249
Therulaadhaan Meypporul Kantatraal Therin
Arulaadhaan Seyyum Aram
Explanation :
If you consider the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom
Today rasi palan - 09.01.2021
இன்றைய பஞ்சாங்கம்
09-01-2021, மார்கழி 25, சனிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 07.17 வரை பின்பு தேய்பிறை துவாதசி. விசாகம் நட்சத்திரம் பகல் 12.32 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் - 09.01.2021
மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பயணங்களை தள்ளி வைக்கவும். எதிலும் கவனம் தேவை.
ரிஷபம்
இன்று தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம்
இன்று உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நவீனகரமான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.
கடகம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். வியாபார ரீதியான பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் குறையும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். கொடுத்த கடன்களை பெறுவதில் இழுபறி நிலை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கன்னி
இன்று குடும்பத்தில் நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
துலாம்
இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். அலுவலகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழிலில் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.
மகரம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
கும்பம்
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
மீனம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் ஏற்படும். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
cell: 0091 7200163001. 9383763001,