திருநெல்வேலி அருகே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின், கான்வாயின் பின்னால் சென்ற கார்கள், ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளான காட்சிகள், இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.




 
பி.எச். பாண்டியனின் சொந்த ஊரான சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் அவரது நினைவாக 20 சென்ட் பரப்பளவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க சென்ற தமிழக முதல்வர் பழனிசாமி சென்றார். இதற்காக சென்னையிலிருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடி வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் சேரன்மகாதேவி சென்றார். கோவிந்தபேரி விழாவில் பங்கேற்ற பின்னர் அவரது சொந்த மாவட்டமான சேலம் செல்ல உள்ளார்.

இந்நிலையில், திருநெல்வேலி அருகே இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் சென்ற வாகனம் மோதி விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார், வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர்.

முதல்வர் கான்வாயில் சென்ற கார்கள், மோதி விபத்திற்குள்ளான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.