வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏழாம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வரும் 7ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்


வட தமிழகத்திலும் தென் தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

புதனன்று பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.