பல ஆண்டு காலமாக செயல்படாமல் இருந்த ராணிப்பேட்டை ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து சேவை பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் சரக்குகள், வாலாஜாபேட்டை வாயிலாக சென்னை தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க ஏதுவாக சரக்கு ரயில் சேவை கூடிய விரைவில் துவங்கப்பட உள்ளது.

இந்நிலையில் பல ஆண்டுகாலமாக செயல்படாமல் பாழடைந்த நிலையில் இருந்த ராணிப்பேட்டை ரயில் நிலையம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது இதன்காரணமாக ராணிப்பேட்டை ரயில் நிலையம் புதுப்பொலிவு அடைந்துள்ளது