நாடுமுழுவதும் கொரோனா தொற்று நோயினால் மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் அண்மையில் அதை தடுப்பதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.


ராணிப்பேட்டை - ஆட்சியர் அலுவலகத்தில் கொரானா தடுப்பூசி குறித்த ஆலோசனை கூட்டம்


கோவிட்- 19 தடுப்பூசியை அமல்படுத்துவது தொடர்பாக இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கோவிட் -19 தடுப்பூசி போடுவது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் A.R. கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ம . ஜெயச்சந்திரன் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் க.இளம்பகவத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். பூரணி , அரக்கோணம் கோட்டாட்சியர் பேபி இந்திரா இணை இயக்குனர் டாக்டர் யாஸ்மின் , மருத்துவ சுகாதார அலுவலர் வேல்முருகன் , ராணிப்பேட்டை மாவட்டம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் , வட்டார வளர்ச்சி மருத்துவர்கள் , நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் .